அசத்தும் அறிவியல் : ஸ்கெட்ச் பேனா ஊதுகுழல்
முதலில் ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து உள்ளிருக்கும் மை உறிஞ்சும் பஞ்சு உள்ள குழலை நீக்கி விட வேண்டும். பேனாவின் கூர் முனையை மட்டும் வெட்டி விட வேண்டும். இப்பொழுது நம்மிடம் தோராயமாக ஒரு ஏழு சென்டிமீட்டர் அளவிலே வெட்டிய ஸ்கெட்ச் பேனா குழல் இருக்கும்.
ஒரு சிறிய நெகிழி அட்டையை (Plastic Board), எடுத்துக் கொள்ளவும்.
நெகிழி அட்டையை ‘L’ (Plastic Board) வடிவில் மடக்கவும்.
‘L’ வடிவில் உள்ள அந்த நெகிழி அட்டையை ஸ்கெட்ச் பேனாவின் ஒருமுனையின் வாயை அடைக்கவும்.
அடைத்து விட்டு அந்த ஸ்கெட்ச் பேனாவையும் நெகிழி அட்டையையும் இணைக்க ரப்பர் பேண்ட் பயன்படுத்தவும்.
இப்பொழுது அடைக்கப்பட்ட பகுதியிலே காற்றை ஊதினால் ஸ்கெட்ச் பேனா ஊதுகுழல் தயார்.
என்ன நடக்கிறது? அறிவியல் காரணம்?
ஒலி உண்டாக முக்கியமாக மூன்று காரணிகள் உண்டு அது.
1. அதிர்வு 2. உராய்வு மற்றும் 3. ஒரு ஊடகத் தேவை.
இங்கே அடைக்கப்பட்ட அந்த ஸ்கெட்ச் பேனா குழாய் வழியே ஊதும் பொழுது காற்று வேகமாக உள்ளே செல்கிறது. அப்படிச் செல்லும் பொழுது நெகிழி அட்டையை உரசிக்கொண்டே காற்று உள்ளே செல்வதால் அதிர்வு உண்டாகும். அந்த அதிர்வின் காரணமாகத்தான் ஒலி உண்டாகிறது.
இந்த ஒலியானது காற்றின் வழியே பரவி நம் காதுகளுக்கு வந்து அடைவதால் நம்மால் அதைக் கேட்க முடிகிறது.
காற்றில் ஒலி பரவக்கூடிய வேகமானது நொடிக்கு 330 மீட்டர் ஆகும். இதுவே நீரில் அது நொடிக்கு 700 மீட்டர். திடப் பொருளில் அது நொடிக்கு 1000த்திற்கும் மேற்பட்ட மீட்டர் பாயக்கூடிய வேகம்.
இடியின் ஒலி முதலில் கேட்குமா அல்லது மின்னலின் ஒளி நமக்கு கண்ணில் முதலில் தென்படுமா என்று பார்த்தாலும் மின்னலின் ஒளி தான் நமக்கு முதலில் வந்தடையும். ஏனென்றால், ஒளி பாயக்கூடிய வேகம் நொடிக்கு 300000 கிலோ மீட்டர் (3×108 m/s). ஆனால், இடியின் ஒலி பாயக்கூடிய வேகம் (அது காற்றில் வருவதால்) ஒரு நொடிக்கு 330 மீட்டர். அதனால்தான் மின்னலின் ஒளி நம் கண்களுக்கு முதலில் வந்தடையும் பிறகுதான் இடியின் ஒலி நம் காதில் கேட்கும்.
இந்த ஊதுகுழலை அவசர காலத்தில் கட்டத்தில் தற்காப்புக்காகப் பயன்படுத்தலாம்.