இசைப்போம் வாரீர்! – சின்னப் பயலே சின்னப் பயலே
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
படம்: அரசிளங்குமரி | பாடல்: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | இசை: நி.ராமநாதன் | scale : G minor / sign : 4/4
பல்லவி
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
/பசசா ரிசா / ரிமமாக ரிகா / சாசசாச ச……/ – 2
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா
/கரி / ரிமம காரிச / ரிமமகாரி /காரி காச ரி……/
நீ எண்ணிப் பாரடா
/க சாசசாச சா…../
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
/பசசா ரிசா / ரிமமாக ரிகா / சாசசாச ச……/ – 2
சரணம் 1
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
/சபபா /மகமரி / சபபா / மகமரி / சபபாம தநிபா…../ – 2
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
/பாப / தாத தாதா / பசநிச பதம / ரிகரி / ரீகம / பதாப…/ – 2
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
/சாச நீநிநி / தாததபாப /மாமக / கரி சரிமா…../
உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
/சரி / ரிமாமகாரிச / ரிமகாரிச /ரீகா ரிசச சா…../ -2
சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா
/பசசா ரிசா / ரிமமாகரிகா / சாசசாச ச……/ – 2
சரணம் 2
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி
/பாப பாப / பததநி / நீப / மபதமாம / கபமக / ரிப
மனதில் வையடா
/ மபதமாம / கபமக்காரி…/ – 2
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா
/கரிகசச / ரிமமபபாப / தநிதபதம பா / ச/ தநிதபதம பா…../ – 2
தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
/நிநிநிநிநி / தசநிதபாத ம / ரீமபாநி தா………./
நீ தொண்டு செய்யடா
/ப / ரீமபாநி தா………./
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
/ரிமமகாரிச / ரிமமகாரிச /காரிககசரீ…../
எல்லாம் பழைய பொய்யடா
/ரீக / சசசசாசச………./
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
/பசசா ரிசா / ரிமமாகரிகா / சாசசாச ச……/
சரணம் 3
வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
/தாதாதததாதததாத / தநிசாநி / தாத தாதா…/
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க
/தநிநீநி / பததமாம / ரீமபதா பா……../
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க
/தநிநீநி / பததமாம / ரீமபதா பா……../
உந்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
/பாப / நீநீநீ /தசாநிதாப / ரீமபதாப………/
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
/ பாபபாத / மாமமகபமகரி / பாபபாத / மாமமகபமகரி../ – 2
வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே நீ
/கபபாமகாகமரீச /ரீமபபாபா…./ ப
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே
/ரிமமகாரிச / ரிமமகாரிச / காரிசாசரி / க / சாசசாச சா……/
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
/பசசா ரிசா / ரிமமாகரிகா / சாசசாச ச……/