தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 27
கே.பாண்டுரங்கன்
வழிமுறை: 3 Pronoun Rule
(அ) ‘நான்’, ‘உன்’-_னிடம் உரையாடும்போது ‘நான்’ ‘நான்’ ஆகவும், ‘நீ’ ‘நீ’யாகவும் இருக்கிறாய்.
இது ஒரு ஃபார்முலா. என்னடா இது ‘நான்’, ‘நீ’, ‘அவன்’ என்று குழப்பமா?
கவலை வேண்டாம், ஒவ்வொன்றாகத் தெளிவாகப் பார்ப்போம். புரிவதற்கு PRONOUN TABLE (பிரதிப் பெயர்ச் சொல் அட்டவணை) உள்ளது.
ஓர் உரையாடலை நேர்க் கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றுகிறோம். அப்போது உரையாடுபவர் (பேசுபவர்) பகுதியில் ‘தன்மை’ (1st Person), ‘முன்னிலை’ (2nd Person), ‘படர்க்கை’ (3rd Person) _ மூன்றில் ஒருவராகத்தான் இருப்பர் அல்லவா? அதாவது I அல்லது you அல்லது he/she/it/they ஆகத்தான் இருப்பார்கள். சரிதானே?
பேசுபவர் பகுதியில் ‘நான்’ ‘உன்’னிடம் உரையாடும்போது,
அதாவது I said to you என்று (Reporting Part-இல்) பேசுபவர் பகுதியில் வரும்போது, உரையாடல் பகுதியில் (அதாவது Reported Part-இல்) நான் ‘நான்’ ஆகவே இருப்பார் _ மாறமாட்டார். அதேபோல் நீ ‘நீ’ ஆகவே இருப்பார் – மாறமாட்டார்.
எடுத்துக்காட்டாக, உரையாடல் ஒன்றில், நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது Pronounஇல் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள்!
நேர்க்கூற்றில்:
நான் உன்னிடம் சொன்னேன், “நான் உன்னுடைய இனிப்புப் பண்டங்களை விரும்புகிறேன்’’
அயற்கூற்றில்:
I said to you, “I like your sweets” [Direct Speech]
I told you that I liked your sweets [Indirect Speech]
நான் உன்னிடம் பகன்றேன் நான் உன்னுடைய இனிப்புப் பண்டங்களை விரும்பினேன் என்று.
பார்த்தீர்களா! நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாற்றும்போது Pronoun இல் எந்த மாற்றமும் இல்லை அல்லவா?
ஏனென்றால்… நேர்க்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (person) அயற்கூற்றில் சொல்லப்பட்ட நபரும் (person) அர்த்தம் மாறாமல் அதே நபராகத்தான் (same identity) இருக்க வேண்டும் -_ என்பதால்தான். சரிதானே?
Table அய்ப் பாருங்கள்!
(வழிமுறைகள் வளரும்)