நான் ஏன் வெறுக்கணும்?
“யாரையும் புடிக்காதுன்னு முதல்ல சொல்லாதிங்க… நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்? எல்லாரும் நண்பர்கள் மாறி தான். நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி?” என்று மிக இயல்பாக ‘ஏசியா வில்’ யூடியூப் சேனலில் கருத்துச் சொல்லி கலக்கிய சிறுவன் அப்துல்கலாமை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைத்துப் பாராட்டியுள்ளார். பெரியார் பிஞ்சுகளாகிய நாமும் அச் சிறுவனை வாழ்த்துவோமே!