தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 31
‘ஆழக் குழிதோண்டி அதிலொரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை’ _ அது என்ன?
தென்னை மரம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
அந்தத் தொண்ணூறு முட்டைகள் எவை?
இளநீர்க் குலைகள் அல்லவா?
மொழியும் அவ்வாறே.
ஒரு மொழியின் இலக்கணத்தை உங்களுக்குள் விதைத்து.
முயற்சி எனும் உரம் போட்டு,
ஆர்வம் எனும் நீரூற்றி,
பயிற்சி எனும் பாத்திகட்டி
வளர்த்து வந்தால்…
சிந்தனைகள் எனும் தொண்ணூறு கோடி இளநீர்க் காய்கள் நமக்குக் கிடைக்குமல்லவா?
எனவே, பிஞ்சுகளே!
தேவை கருதி, நன்மை கருதி தமிழ் மூலம் இந்த ஆங்கில மொழி இலக்கணத்தை (English Grammar) நமக்குள் விதைக்கிறோம்!
அது நெடு மரமாக உறுதியாக வளர்ந்து, சிறந்த ஆங்கிலம் பேசுவதற்கு, எழுதுவதற்கு உறுதுணையாக நிற்கும் என்பதில் அய்யமில்லை.
அதற்கு இலக்கண விதைகளை (வழிமுறைகளை) நட்டு வைப்போம்!
‘நீ’ ‘அவனிடம்’ பேசும்போது,
உரையாடல் பகுதியில் உள்ள ‘நீ’ ‘அவனாக’ மாறுவான்! ((you > he))
‘நான்’ ‘நீ’யாக மாறுவாய்! I > You
‘அவன்’ ‘அவனாக’வே இருப்பான்!’ (he > he)
இந்த வார்த்தை விளையாட்டின் விடுகதைக்கு விடை என்ன?
வேறென்ன? direct Speech லிருந்து Indirect Speech க்கு மாற்றும்போது Pronoun இல் ஏற்படும் மாற்றம்தான்!
எ-கா:
You said to him, “You are my best friend” (நேர்க்கூற்று உரையாடல்)
இந்த உரையாடலை அயற்கூற்றுக்கு மாற்றினால்…
அதாவது,
ou said to him, “You (நீ) are
my (என்னுடைய) best friend” (Direct Speech)
You told him that he (அவன்) was your (உன்னுடைய) best friend
(Indirect Speech)
இப்படியான ஓர் உரையாடல் சூழ்நிலை வந்தால், ஆர்வமாகவும், மெதுவாகவும் படித்தால், உங்களுக்கு இது புரியும். புரிந்தால் ஆங்கிலம் தவறு இல்லாமல் பேசுகிறோம், எழுதுகிறோம் என்ற தன்னம்பிக்கை கிடைக்கும்.
மேலே எ.கா. இல் உள்ளது போல், நீ அல்லது நீங்கள், அவனிடம் அல்லது அவர்களிடம் பேசும்போது…Reported part
(உரையாடல் பகுதியில்)இல் ஏற்படும் Pronoun மாற்றங்கள் புரிகிறதல்லவா!
தெளிவாக அறிய அட்டவணையைப் பார்த்து வாசியுங்கள்! ஆங்கிலத்தையும் நேசியுங்கள்!