இசைப்போம் வாரீர்! – மக்கள் நலத்துக்கு மதமா
பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இசைத் தொகுப்பு: பாரதிதாசன் பாட்டருவி
குரல்: நித்யஸ்ரீ மகாதேவன்
Scale: c minor. sign: 6/8
இராகம் : சிந்துபைரவி
தொகையறா….
மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி
/பபப / பதநிச. / ரிநிச../ சாச
மதத்தின் நலத்துக்கு மக்களா
/ சரிக. சகரிநிபா..பப / பதநி….
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. /
பல்லவி
மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி
/ பபப / பதநிச. / ரிநிச. ./ சாச
மதத்தின் நலத்துக்கு மக்களா………
/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. / ……….2
சரணம் 1
திக்கெட்டும் உள்ளவர் யாரும் _ ஒன்று
/ சரிச. / மபம. / தாத…./ மப
சேராது செய்வதே மதமாகுமானால்——____—2
/ நிநிநி / ததத / தபமாமபத../
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் _ அப்
/ பபப / பதநி / நீ நி / ப /
பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்__—2
/ பசாநி / தபாம / கமக / ரிச /
எக்கட்சி எம்மதத்தாரும் _ இங்கு
/ பபபபதநிரிநிச / சா/
எல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும்___—-2
/சசநி / தாபாம / கமகரிச /
மக்கள்நலத்துக்குமதமா? அன்றி
/ பபப / பதநிச. / ரிநிச. / சாச
மதத்தின் நலத்துக்கு மக்களா………
/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. /
சரணம் 2
எல்லா மதங்களும் ஒன்றே _ அவை
/ ததநி / சநித பா…ம /மம /
எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே
/ ததப / நிநித / ததத / பா……ம/
சொல்லால் முழங்குவது கண்டீர்_அவை
/ ததநி / சநித பா…ம / மம /
துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?
/ ததப / நிநித / ததத / பா……ம/
எல்லோரும் மக்களேயாவர் _ இங்கு
/ பபபபநிசரீரி / ரிரி /
எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்
/ ரிரிரி / ரிரிரி / சரிநி / சாச /
எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்
/ ரிரிரி / நிநிநிநி / ரிரிரி / ச ச /
எல்லாரும் ஒரு தாயின் செல்வர் _ இதை
/சசச / நிசநி / தாப / கக /
எண்ணாத மக்களை மாக்களென்போமே!
/ கமப / தநிச / ககரிநிச /
மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி
/ பபப / பதநிச. / ரிநிச. ./ சாச
மதத்தின் நலத்துக்கு மக்களா………
/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. /
சரணம் 3
வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே _ நல்
/ சரிசமபம / தாத…../ ம
வழிகாட்டியான பின் வழிகாட்டிடாமல்
/நிநிநி . / ததத / தாபாமபத /
பழி கூட்ட வைத்திருப்பீரோ?……….. _ நீர்
/ பபபதாபதநீநி……………./ ப /
பகை கூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?
/ சசசசசச / சரிநிசாச………/
பிழியாக் கரும்பினிற் சாற்றை _ நீர்
/ பசநிதநிதப / பாபா/ ப /
பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே
/ நிசநி / தநித / கமகரிச/
அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? _ நல்
/ சசநிசநிப / பா……நி / ப /
அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை.
/பநித……./ பதமகம / மாபதரீ…….நிசா……/
மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி
/ பபப / பதநிச. / ரிநிச. ./ சாச
மதத்தின் நலத்துக்கு மக்களா………
/ சரிக. சகரிநிபா..பப / பதநி…………/
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
/சா…ம. / மா…..தா…../ ரீ…….ச. / ……….2<