தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 34
பாண்டு ரெங்கன்
இந்த இதழில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது Step 5 (படிமுறை 5)
காலமும் இடமும் சார்ந்த சொற்களை(Related to Time and Place அய்) எப்படி மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி!
சில சொற்கள் நேர்க் கூற்றுக்குப் பொருத்தமாகவும், அயற்கூற்றுக்குப் பொருத்த-மில்லாததாகவும் இருக்கும். அவற்றை (நம் அட்டவணைக்கேற்ப) புதிய சொல்லாக மாற்ற வேண்டும்.
அதாவது நேர்க்கூற்றில் பயன்படும் ‘இந்த’ என்னும் சொல் அயற்கூற்றில் ‘அந்த’ என்றவாறு மாறும். ஏன்?
ஒருவர் பேசியதை எடுத்துச் சொல்வதுதானே அயற்கூற்று!
கீழே உள்ள உரையாடலைக் கவனியுங்கள்!
நீலமேகம் வானவில்லிடம் சொன்னான், “இந்தத் தேர்வு எளிமையாக இருந்தது’’
நீலமேகம் வானவில்லிடம் அந்தத் தேர்வு எளிமையாக இருந்ததாகக் கூறினான்.
வானவில் நீலமேகத்திடம் சொன்னாள், “இந்த நாள் பயிற்சி மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது.’’
வானவில் நீலமேகத்திடம் அந்த நாள் பயிற்சி மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது என்பதாகக் கூறினாள்.
அட்டவணையைப் பயன்படுத்துங்கள்:
கடந்த இதழில் நேர்க்கூற்றிலிருந்து அயற்-கூற்றுக்கு மாறும்போது Present tense என்பது Past tense ஆக மாறியதைப் பார்த்தோம். அந்த மாதிரியான இறந்த கால சூழ்நிலையில் _ மற்ற சொற்களும் அதே இறந்த கால சூழ்நிலையைக் காண்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நிகழ்கால சூழ்நிலையைக் காண்பித்தால் அது சொற்றொடர்களுக்குப் பொருத்தமாக இருக்காது. அது நேர்க்கூற்றைக் சொல்வது போலிருக்கும்.
‘இது நல்ல திட்டம்’ என்பதை அயற்கூற்றில் எடுத்துச் சொல்லும்போது… இது நல்ல திட்டம் என்று எடுத்துச் சொல்ல முடியாது.
இன்னொருவர் எடுத்துச் சொல்லும்போது அது அயற்கூற்றாகப் பேச வேண்டும். எனவே, ‘அது நல்ல திட்டம்’ என்றுதானே சொல்ல வேண்டும்.
கவனியுங்கள் எ.கா.:
திட்ட அதிகாரி, “இது ஒரு நல்ல திட்டம்’’ என்றார். (Direct Speech)
Project Officer said, “This is a Good Project.”
திட்ட அதிகாரி அது ஒரு நல்ல திட்டம் என்றவாறு கூறினார்.(Indirect Speech)
Project Officer said that that was a Good Project.