• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அழகுதமிழ் நீதிநெறி

2022_untitled-2
ஆகஸ்ட் 2022பாடல்கள்

குரங்குக்கு மழைநேரம்
கூறப்போன அறிவுரையால்
வருந்திற்று கூடிழந்து
வாட்டமுற்றுத் தூக்கணம்!

வாய்திறந்து காக்கையினை
வஞ்சகமாய்ப் பாடச்சொல்லி
வாய்விட்டு வீழ்ந்துவிட்ட
வடைபுசித்த குள்ளநரி!

தான்இட்ட முட்டையுடன்
தன்கூட்டில் குயில்முட்டை
தான்அதையும் பொரித்துக்குஞ்சு
தயவுடனே தரும்காகம்!

வேட்டுவனின் காலில்கொட்டி
வீசுமவன் வேலும்பட்டு
காட்டுப்புறா மாளாமல்
காத்தசிறு கட்டெறும்பு!

கண்ணுறங்கும் குழந்தையினைக்
கடிக்கவந்த நல்லபாம்பைத்
துண்டுதுண்டாய்க் கடித்தெறிந்து
தூய்நன்றி காட்டியநாய்!

பற்றித்தமைத் தாம்புசிக்கப்
பாய்ந்துவந்த வேங்கையினை
ஒற்றுமையாய்த் தாமெதிர்த்து
ஓட்டிவிட்ட எருமைத்திரள்!

அறுந்துபல முறைவிழுந்தும்
அயராமல் முயன்றுவலை
முறையாகப் பின்னியதை
முடித்துவிடும் சிறுசிலந்தி!

சிறுவர்களின் பாடங்களில்
சிறந்தகதைப் பாடல்களில்
அறியும்படி ஓதிவரும்
அழகுதமிழ் நீதிநெறி!

– தளவை இளங்குமரன்
இலஞ்சி, தென்காசி மாவட்டம்

23
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகள் நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியவை!2nd August 2022
சிறுவர் பாடல்5th September 2022சிறுவர் பாடல்

மற்ற படைப்புகள்

38
பாடல்கள்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by - கவிஞர் விண்மீன்

சிறார் பாடல்: வாடும் வானம்

Read More
2023_may_1
பாடல்கள்மே 2023
3rd May 2023 by ஆசிரியர்

அளவோடு உண்க!

Read More
36
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

நிறைவுடன் வாழ்வாய்!

Read More
2019_aug_v17
ஆகஸ்ட் 2019பாடல்கள்
1st August 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2020_jul_v40
ஜூலை 2020பாடல்கள்
30th July 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2021_jul_v5
ஜூலை 2021பாடல்கள்
3rd July 2021 by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p